திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் இன்று 20 மணி நேரம் காத்திருக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது கோடை விடுமுறை காரணமாக தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் சுவாமியை தரிசிக்க பலமணி நேரமாகிறது. இந்நிலையில் நேற்று 80,048 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 35,403 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ4.17 கோடி காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதிலும் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள ஏடிசி காம்ப்ளக்ஸ் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை உள்ளது. ஆனால் ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்திலும் சுவாமி தரிசனம் செய்தனர்.