காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி காலை, மாலை என இரு வேளைகளிலும் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கங்கைகொண்டான் மண்டப பகுதியில் இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டது. திவ்ய பிரபந்தம், வேத பாராயணம், ஸ்தோத்திர பாடல் பாடுவதில் ஆண்டுதோறும் வடகலை தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்படும். கோஷ்டி பாடக்கூடாது என கோயில் நிர்வாகம் கூறிய நிலையில் தடையை மீறி ஒரு தரப்பினர் பாடி வருவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது