ஆம்புலன்ஸ் வாகனத்தை சிறுவன் இயக்கியபோது
கடலூர் அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சிறுவன் இயக்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளியை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றிருந்த நேரத்தில் சிறுவன் இயக்கியதால் விபத்து ஏற்பட்டது. சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 2 பெண்கள் காயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.