தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நாளை முதல் அனுமதி:
உதகை அருகே உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நாளை முதல் அனுமதி அளித்துள்ளனர். தொட்டபெட்டா சந்திப்பில் செயல்பட்டு வரும் ஃபாஸ்டேக் சோதனைச்சாவடியால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஃபாஸ்டேக் சோதனைச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றும் பணி கடந்த 16-ம் தேதி தொடங்கியது. பணிகள் நடைபெறுவதால் தொட்டபெட்டா மலை சிகரம் கடந்த 7 நாட்களாக மூடப்பட்டுள்ளது.
