திருச்சி மாவட்டத்தில் மாஜி படைவீரர்கள் குழந்தைகளுக்கு சார்ந்தோர் சான்று பெற அழைப்பு
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா் தம் சார்ந்தோர்கள், 2023-24ம் கல்வியாண்டிற்கு தங்களது சிறார்கள் பல்வேறு கல்விகளில் சோ்வதற்கு சார்ந்தோர் சான்று ஆன்லைனில் http://exwel.tn.gov.in என்ற முகவரியின் மூலம் விண்ணப்பித்து பெற்றிட வழிமுறைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி சார்ந்தோர் சான்று பெறலாம்.