முதலமைச்சருக்கு அன்புமணி கடிதம்
கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் பெரிய பசுமை பூங்கா அமைக்க வேண்டும் :
கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் பெரிய பசுமை பூங்கா
அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். உயிரி பன்மய செயல்திட்டம், சென்னை பொதுவெளிகள் செயல் திட்டம் ஆகியவற்றை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் பசுமை பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.