பால் Vs தயிர்
குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க விரும்புபவர்களுக்கு பாலை விட தயிரே சிறந்த தேர்வாக இருக்கும். தயிரில் உள்ள நொதித்தல் செயல்முறை செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது லாக்டோஸ் உள்ளடக்கத்தை குறைத்து நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை ஊக்குவிக்கிறது. பாலில் உள்ள லாக்டோஸ் உங்களுக்கு எந்த பாதிப்புகளையும் தரவில்லை என்றால், பால்குடிப்பதும் நல்லதுதான். இருப்பினும் பாலைவிட தயிரை உங்கள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான அமைப்பை மேம்படுத்தி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கலாம்.