தொல்லையால் வாக்கிங் செல்வோர் அவதி
விளையாட்டு மைதானத்தில் நாய்கள் தொல்லையால் வாக்கிங் செல்வோர் அவதி
அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலை மற்றும் மாலை வேளைகளில் 200க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி செய்ய வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் விளையாட்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும், நாய்கள் கூட்டமாக சுற்றி வருவதால் நடைபயிற்சி செல்வோர், விளையாட்டு பயிற்சிக்கு வருபவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் பயத்துடனே நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதே போல், விளையாடும் சிறுவர்களையும் நாய்கள் கடிக்கும் அபாயம் உள்ளது. எனவே, விளையாட்டு மைதானத்தில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.