திமுகவில் பின்வரும் மாற்றங்கள்

லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்ததும் திமுகவில் பின்வரும் மாற்றங்கள் தேர்தல் ரிசல்ட் வந்ததும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் இருக்கும். 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றம் இருக்கும்.

சரியாக 5 வாரங்களுக்கு பிறகு அதாவது ஜூன் 2ம் வாரம் பின்வரும் மாற்றங்கள் திமுகவில் நடக்கலாம் என்கிறார்கள்.

  1. உதயநிதி ஸ்டாலின் கண்டிப்பாக துணை முதல்வர்ஆவார் .
  2. புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

3, கூடுதலாக ஒரு சிறுபான்மையினர் அமைச்சர் சேர்க்கப்பட்டு ஒரு அமைச்சர் நீக்கப்படுவார்.

  1. பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

5, தெற்கில் உள்ள குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஒருவர் அமைச்சராக உள்ளார்.

  1. திமுக அமைச்சரவை மாற்றப்படலாம். தமிழ்நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நடக்க போகிறது. திமுக ஆட்சி கட்சியாக இருக்கிறது. வலிமையான கூட்டணி வைத்துள்ளனர். இதனால் ஒரு இடங்களில் கூட தோற்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இதை மீறி அந்த கட்சி தோற்க முடியாது. அப்படியும் தோல்வி அடைந்தால் அதன் அர்த்தம் உள்ளடி வேலைகள் என்பதுதான். அதாவது கட்சிக்கு உள்ளேயே சிலர் பார்த்த உள்ளடி வேலைகள் காரணமாக தோல்வி அடைவோமோ என்ற எண்ணம் உள்ளது. இப்படி உள்ளடி வேலை பார்த்த அமைச்சர்கள் நீக்கப்படலாம்.
  2. அமைச்சர் பிடிஆருக்கு உயரிய பொறுப்பு ஒன்று அளிக்கப்படலாம். அதாவது அமைச்சரவையிலேயே உயரிய இலாக்கா வரும் வாய்ப்புகள் உள்ளன.
  3. அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு ப்ரோமோஷன் கண்டிப்பாக கிடைக்கும். அமைச்சர் உதயநிதியிடம் உள்ள விளையாட்டு துறை மாற்றப்படலாம் என்கிறார்கள்.
  4. உளவுத்துறை சார்பாக ரிப்போர்ட் சென்றுள்ளது. அதோடு இல்லாமல் சபரீசன் நடத்தும் பென் அமைப்பு சார்பாகவும் ரிப்போட் சென்றுள்ளது. அவர்களும் சர்வே நடத்தி உள்ளனர். சில முக்கிய தொகுதிகளில் பொறுப்பாளர்கள், பொறுப்பு அமைச்சர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று ரிப்போர்ட் கிடைத்துள்ளது.
  5. 5-6 அமைச்சர்கள் மீது புகார் சென்றுள்ளது. கடைசி கட்டத்தில் செய்த பணிகள் காரணமாக திமுகவிற்கு வெற்றி இருக்கும். 5-6 தொகுதிகளில் சரிவு இருக்கும். அந்த அமைச்சர்களை வேண்டுமானால் திமுக தலைவர் மாற்றும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.