கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா:
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? அனுமதி பெறவில்லை என்றால் அணை கட்டுவதை கேரள அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர், கரூர் மாவட்டங்களில் வேளாண் பாசனத்திற்கும், பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாராமாக அமராவதி ஆற்றுபடுகை விளங்குகிறது. இந்த அமராவதி அணைக்கு நீர் ஆதாரமாக திகழும் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைகட்டுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களான கேரளா மாநிலத்தில்உள்ள பாம்பாறு, மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகி தேனாறு, சிலந்தி ஆறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் அமராவதி அணையை வந்தடைகின்றன.