ஈரானில் ஜூன் 28-ம் தேதி அதிபர் தேர்தல்
ஈரானில் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட முகமது மொக்பர் தேர்தல் நடத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் ஈரான் அரசியல் சட்டப்படி நீதித்துறை தலைவர், சபாநாயகருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் முடிவில் ஜூன் 28-ல் ஈரான் அதிபர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.