முதல்வர் மு.க.ஸ்டாலின்
திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கி திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.