மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்
கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்தவர் கைது.. இந்தியாவில் சர்வதேச மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்
கேரளாவில் இருந்து ஆட்களை அழைத்து சென்று மனித உடல் உறுப்புகளை கடத்தி வெளிநாடுகளில் விற்பனை செய்த வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். கேரளா மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அழைத்து சென்று மனித உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்வதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் திருச்சூர் வலபாட்டை சேர்ந்த சபீர் நாசர் என்பவரை கொச்சி விமான நிலையத்தில் கைது செய்தனர். சபீர் நாசர் சர்வதேச உடல் உறுப்பு மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதை பயன்படுத்தி கொச்சியில் இருந்து குவைத்-க்கும், ஈரானுக்கு அழைத்து சென்று அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகத்தை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதல் பலமுறை குவைத் மற்றும் ஈரானுக்கு சென்று வந்ததும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இன்னும் சிலர் சிக்க வாய்ப்புள்ளதாக கேரளா போலீசார் தெரிவித்துள்ளனர்.