திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்க
திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்துக்கு 10 ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து பிள்ளையார்நத்தம் நீக்கப்பட்டு அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி சேர்க்கப்பட்டிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது .
கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மூலம் நகராட்சியாக இருந்த திண்டுக்கல் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியும் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக எல்லை விரிவாக்கம் செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு அருகில் உள்ள பள்ளபட்டி, குரும்பபட்டி, பொன்னிமாந்துறை, பிள்ளையார்நத்தம், செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், அடியனூத்து, தோட்டனூத்து ஏற்கனவே இணைக்க பரிந்துரைக்கப்பட்ட 10 ஊராட்சிகளில் பிள்ளையார் நத்தம் ஊராட்சி நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி இணைக்கப்பட்டு இருக்கிறது
பிள்ளையார்நத்தம் ஊராட்சி நீர்க்கப்படும் பட்சத்தில் திண்டுக்கல் மதுரை சாலையில் உள்ள கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மாநகராட்சி எல்லைக்கு வெளியே சென்று விடும் இதனால் அந்த நிறுவனங்கள் மூலம் மாநகராட்சி கிடைக்க வேண்டிய வரி வருவாய் இழப்பு ஏற்படும் எனவே பிள்ளையார்நத்தம் ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது