சிஎஸ்கே போராட்டம் வீண்: பிளே-ஆஃபில் ஆர்சிபி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது.
219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடனும், தோல்வி அடைந்தாலும் 201 ரன்கள் எடுத்தால் பிளே -ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற எதிர்பார்ப்புடனும் சென்னை அணி களத்தில் இறங்கியது.
ஆனால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. எலிமினேட்டர் சுற்றில் சன் ரைசர்ஸ் அணியை சந்திக்கவுள்ளது.