750 பக்தர்களுக்கு மஞ்சப்பை
திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை
திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை தரிசனம் செய்து திரும்பிய 750 பக்தர்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் மற்றும் மஞ்சள் பைகளை வழங்கி, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் ‘பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான பிரசாரம் செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்குதாரர்களை அழைத்து மக்களிடையே மஞ்சள் பைகளை வழங்கி, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் துவங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 23ம் தேதி மஞ்சள் பைகளை வழங்கி, பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார்.