முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் புகாரில்

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் புகாரில் முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார். டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் கைதான முதல்வர் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலையொட்டி ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீனில் வௌியே வந்துள்ளார். இதையடுத்து அவரை சந்திப்பதற்காக ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த திங்கள்கிழமை கெஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தன்னை முதல்வரின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் போலீசில் புகார் அளித்தார்.

அதில் , “முதல்வர் வீட்டுக்கு சென்றபோது பிபவ் குமார் அனுமதி மறுத்து, முழு பலத்துடன் என்னை தாக்கினார். மாதவிடாயில் இருந்த நான் வலியால் துடித்து, கதறிய போதும் முழு பலத்துடன் 7, 8 முறை கன்னத்தில் அறைந்தார். என்னை காலால் உதைத்தார். ஆனால் அங்கிருந்த யாரும் என்னை காப்பாற்ற வரவில்லை” என்று ஸ்வாதி மாலிவால் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.கொலை மிரட்டல், மானபங்கம், தாக்குதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிபவ் குமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.