மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது

கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு:

திருவேற்காடு கூவம் கரையோர ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக கூவம் நதிக்கரையையொட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகள், மழைக்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கும் எனவும், நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாக கூறியும் வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.