பிரியங்கா காந்தியின் அறச் சீற்றம்

என்னது…? மோடியின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’கா?

ஏழைக் குடும்பங்களுக்கு 5 கிலோ ரேஷன்
வழங்கும் ஒன்றிய அரசின் கொள்கையை
மோடியின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’
என்று கூறிய பத்திரிகையாளரை
லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்
பிரியங்கா காந்தி.

மக்களுக்காக நியாயம் கேட்கும்
அறச் சீற்றத்தை
அவர் முக பாவத்திலும், வார்த்தைகளிலும்

கவனியுங்கள்.

மூத்த பத்திரிகையாளர் :
ஏழைக் குடும்பங்களுக்கு
5 கிலோ ரேஷன் வழங்கும் திட்டம்
தங்களது ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்று
மோடிஜி சொல்கிறாரே,

உங்கள் கருத்து என்ன?

பிரியங்கா காந்தி :
என்னது…?
மோடியின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’கா?
அது யாருடைய மாஸ்டர் ஸ்ட்ரோக்?
அது யார் ஆரம்பித்த திட்டம்?
எத்தனை வருடங்கள்

நீங்கள் பத்திரிகையாளராக இருந்தீர்கள்?”

மூத்த பத்திரிகையாளர் :
சுமார் 20 ஆண்டுகளாக நான்

பத்திரிகையாளராக இருக்கிறேன்.

பிரியங்கா காந்தி :
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது
உணவை
ஒர் அடிப்படை மனித உரிமையாக
உறுதிசெய்யும் சட்டம் ஆகும்.
2013 ஆம் ஆண்டிலேயே
இதனைக் கொண்டுவந்தது
காங்கிரஸ் ஆட்சி.

இந்தியாவில் உள்ள
ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும்
அடிப்படை ரேஷன் உரிமை சட்டம்,
காங்கிரஸ் கொண்டுவந்த சட்டம்
என்பதை மறக்காதீர்கள்.

நாட்டின் 140 கோடி மக்களில்
சுமார் மூன்றில் இரண்டு பங்குள்ள
ஏழை மக்களுக்கு,
இலவசமாகவும், மானிய விலையிலும்
உணவு தானியங்களை வழங்கும் சட்டம்தான்
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் ஆகும்.
இந்த அற்புதமான சட்டம்,
செப்டம்பர் 12, 2013 ஆம் தேதியே
UPA ஆட்சியில் சட்டமாக்கப்பட்டது
என்பதை மறக்காதீர்கள்.

ரேஷன் மூட்டையில்
மோடியின் போட்டோ ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால்
அது மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகிவிடுமா?

அடித்தட்டு மக்களுக்காகவே சிந்தித்து,
அதற்கான கோட்பாடுகளை உருவாக்கி,
திட்டங்களை செயல்படுத்தி,
மக்களின் உரிமைகளை
வலுப்படுத்தும் கட்சி காங்கிரஸ் கட்சி.

காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே
தொடங்கிவைத்த திட்டம் என்பதால்தான்
5 கிலோ ரேஷன் வழங்கும் திட்டத்தை
நிறுத்த முடியாத கட்டாயத்தில்
மோடி இருக்கிறார்.
அல்லது பெரும் கோடீஸ்வரர்களுக்கு
அந்தப் பணத்தைக் கொடுப்பதற்கு
மோடி திட்டம் போட்டிருப்பார்.

நீங்கள் ஒரு பத்திரிகையாளர்
என்று சொல்லிக்கொள்கிறீர்கள்.
பொதுமக்களுக்கு சரியான தகவலை
வழங்குவது உங்கள் பொறுப்பு.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்
மோடியின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’
என்ற பொய்யை
இன்னொருமுறை பரப்பாதீர்கள்.
போலியான ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு
மக்களை ஏமாற்றும்
மோடியின் பசப்பு வேலைக்குத்
துணைபோக வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published.