பாஜக போராட்டம் நடுத்த முடிவு

வானூர் அருகே அரசு கொடுத்த விவசாய நிலங்களை குண்டர்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் அபகரிப்பு பாஜக போராட்டம் நடுத்த முடிவு வானூர்,மே 18_

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் வானூர் ஒன்றிய தலைவரும் சமூக ஆர்வலர் தங்க சிவக்குமார் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட புது குப்பம் ஊராட்சி எடச்சேரி கிராமத்தில் சுமார் 600 ஏக்கருக்கு மேலாக அரசாங்கத்தால் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பட்டா நிலம் அந்த நிலத்தினை அவர்கள் பராமரிப்பின்றி விட்டதின் காரணமாக 2005 -2006 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திரு கலைஞர் ஆட்சியின் பொழுது அரசாங்கம் நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு நிலம் வழங்கி அதற்கு பட்டாவும் வழங்கும் திட்டம் செயலில் இருந்தது அந்தத் திட்டத்தை சாதகமாக பயன்படுத்தி அரசாங்க அதிகாரிகளும் ரியல் எஸ்டேட் மாபியாக்களும் சேர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பட்டா நிலத்தை மற்றும் அரசாங்கத்துக்கு சொந்தமாக இருந்த புறம்போக்கு நிலத்தையும் சுற்றுவட்டாரங்களில் இருக்கின்ற கிராம மக்களின் பெயர்களுக்கு முறைகேடாக பட்டா பெறப்பட்டு அதாவது நில ஒப்படை மூலமாக கண்டிஷன் பட்டாவாக( அசைன்மென்ட் பட்டா) பெறப்பட்டு இந்த கண்டிஷன் பட்டாவாக பட்டது அரசாங்கத்தால் சில நிபந்தனைகளை விதித்து கொடுக்கப்படும் பட்டாவாகும் அதில் குறிப்பாக இந்த பட்டாவின் மூலம் எந்த ஒரு கால கெடுவிற்குள் ஒரு பரிவர்த்தனையும் விற்கவோ வாங்கவோ கூடாது என்பது முக்கியமான ஒரு நிபந்தனை ஆகும் முறைகேடாக பெறப்பட்ட பட்டாவில் மற்றும் சில ஏழை விவசாயிகளுக்கு நிலமற்ற ஏழைகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நில ஒப்படை மூலமாக நிலங்கள் வழங்கப்பட்டது கண்டிஷன் பட்டாவாக அந்த நிலங்களையும் முறைகேடாக சொற்ப பணத்திற்காக மிரட்டியும் உருட்டியும் ஏழை விவசாயிகளிடமிருந்து முறைகேடாக கிரயம் பெற்று நிலத்தை காலி செய்வதற்கு சில குண்டர்களை வைத்து ஏழை விவசாயிகளை அப்புறப்படுத்தி இந்த ரியல் எஸ்டேட் மாபியாக்கள் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளுக்கு விற்று லாபம் பார்த்து உள்ளனர்.

60 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் அரசுக்கு சொந்தமான பொறம்போக்கு நிலம் நீர்வழிப் போக்குவரத்து ஓடை, அனைத்தும் ஒட்டுமொத்தமாக சேர்த்து கம்பி வேலி அமைத்து சூரிய ஒளி மின்சார தகுடு பொருத்துவதற்கு வேலை நடந்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக விவசாயம் செய்வதற்கு அந்த வழியாக செல்லக்கூடாது என்று கம்பி வேலி அமைத்து தகராறில் ஈடுபடுகின்றனர் அதுமட்டுமின்றி இந்த நிலம் முறைகேடாக கிரயம் பெற்று அதாவது நிலம் இல்லாத ஏழைகளுக்கு அரசாங்கத்தால் நில ஒப்படை மூலமாக அசைன்மென்ட் பட்டா வழங்கப்பட்டது அந்த அசைன்மென்ட் பட்டாவை முறைகேடாக விவசாயிகளிடமிருந்து பி என் பி சி ஆர்டிகல்ச்சர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஏழை விவசாயிகளை ஏமாற்றி முறைகேடாக பத்திர பதிவு செய்தது தற்பொழுது இந்த நிறுவனம் எஸ் என் என் துளசி நாராயணன் ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிரின் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிெடட் கம்பெனிகள் சேர்ந்து வாங்கி விவசாயம் செய்கின்ற நிலத்தில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு செய்வதற்கு முனைப்பு காட்டுகின்றனர் சுத்தி இருக்கின்ற விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு வழிவுடாமல் இடையூறு செய்கின்றனர் இது மட்டும் இன்றி நில ஒப்படை மூலமாக நிலம் வழங்கப்பட்ட விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரித்து இருக்கின்றனர் இதனை உண்மை தன்மையை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் விரைந்து விசாரணை செய்து தவறு நடந்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்குமாறு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.மேலும் பாஜக சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.