இந்திய தூதரக, இஸ்ரேல் அரசு அதிகாரிகள் அஞ்சலி
காசாவில் இந்திய ராணுவ வீரர் உயிரிழப்புக்கு மன்னிப்பு கேட்ட ஐநா:
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர் 7 மாதங்களை கடந்தும் நீடிக்கிறது. இந்திய ராணுவத்தில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்ற கர்னல் வைபவ் அனில் காலே(46) ஐக்கிய நாடுகள் சபை சார்பில் ரஃபா எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த 14ம் தேதி காலை ரஃபா யூனிஸ் கானில் உள்ள மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தா அனில் காலே சுட்டுக்கொல்லப்பட் டார். வைபவ் அனில் காலே உயிரிழப்புக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் காசாவில் கர்னல் வைபவ் அனில் காலே உயிரிழப்புக்கு ஐநா இந்தியாவிடம் மன்னிப்பு கோரி உள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஐநா பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “இந்திய அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் நாங்கள் எங்கள் மன்னிப்பு மற்றும் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து கர்னல் காலேவின் உடலுக்கு ஐநா, இந்திய தூதரகம் மற்றும் இஸ்ரேல் அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.