அரியானாவில் பேருந்து தீ விபத்து: 8 பேர் பலி
அரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பக்தர்கள் உடல் கருகி பலி ஆகியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து அரியானா சென்ற சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.