ராகி குலுக்கு ரொட்டி

தேவையானவை: 

கேழ்வரகு மாவு – ஒரு கப்,

பச்சரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்,

பொடித்த வெல்லம் – அரை கப்,

வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்,

ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,

நெய் – தேவையான அளவு,

உப்பு –

ஒரு சிட்டிகை.

செய்முறை: கேழ்வரகு மாவை லேசாக வறுத்து… பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். அதில் தேவையான நீர் விட்டு நன்கு பிசையவும். மாவை தோசைக்கல்லில் கனமான அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சின்னச் சின்ன துண்டுகளாக செய்து கொள்ளவும்.

வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, தேன் பதம் வந்ததும் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதில் கேழ்வரகு ரொட்டித் துண்டுகளை சேர்த்துப் பரிமாறவும்.

இரும்புச்சத்து கொண்ட இந்த ரொட்டி, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published.