மின்சார வாரியம்
வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி :
வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும் வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்தால் 100 யூனிட் மின்சாரம் மட்டுமே மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.