முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கட்டடம் கட்ட ரூ.65 கோடி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதிய கட்டடத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்; சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு மருத்துவமனை. பழமையான இந்த மருத்துவமனையில் அனைத்துவகை நோய்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.