போலீஸ் தாக்கி இளைஞர் பலி
அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை
போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறப்படும் மதுரை இளைஞர் கார்த்திக் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது. வழக்கு விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை யாகப்பா நகரை சேர்ந்த கமலாதேவி என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில் ஏப்.2-ல் மதிச்சியம் போலீசார் விசாரணை என்ற பெயரில் கணவர் கார்த்திக்கை அழைத்துச் சென்று தாக்கியதில் பலியானார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.