வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!
டெல்லியில் உள்ள தீப் சந்த் பந்து மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்கேவார் மருத்துவமனை உள்ளிட்ட மாநகரின் முக்கிய மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனைகளில் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் தீவிரமாகச் சோதனையிட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.