அமுல் நிறுவனம் பால் கொள்முதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல்?: ஆவின் மறுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல் நிறுவனம் புதிதாக பால் கொள்முதலை தொடங்கவில்லை என்று ஆவின் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளது. போச்சம்பள்ளியில் அமுல் நிறுவனம் பால் கொள்முதலை தொடங்கி உள்ளதாக வெளியான தகவலுக்கு ஆவின் மறுப்பு தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு அமுல் நிறுவனம் கிருஷ்ணகிரியில் வாடகை கட்டடத்தில் பால் குளிரூட்டும் நிலையத்தை அமைத்தது. தற்போது வரை பால் பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பான எந்த மையத்தையும் அமுல் நிறுவனம் அமைக்கவில்லை.