ரேவண்ணா மீதான வழக்கில் புதிய திருப்பம்
கர்நாடகாவில் எச்.டி.ரேவண்ணா மீதான ஆள் கடத்தல் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண், தான் கடத்தப்படவில்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தன் விருப்பத்தின்பேரில் உறவினர் வீட்டில் இருப்பதாக பெண் வீடியோ வெளியிட்டுள்ளார். பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.