ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
சென்னை எண்ணூர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான். 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஹம்மது நபில் (17), கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்கச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆவடி செல்வதற்காக எண்ணூர் ரயிலில் ஏறியபோது தவறி விழுந்த ஹம்மது நபில், தலையில் அடிபட்டு உயிரிழந்தான்.