முருகன் கோயில் வளாகத்தில் மருத்துவ மையம்
பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் மருத்துவ மையம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக வள்ளிக்குகை அருகே மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஷிப்டு முறையில் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள கடலில் புனிதநீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கடலில் புனித நீராடும் போது குறிப்பிட்ட ஆழத்தை தாண்டியும், அலையில் சிக்கியும் பக்தர்கள் அவ்வப்போது ஆபத்தையும் சந்திக்கின்றனர்.