பரபரப்பு தகவல்
நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் துன்புறுத்தப்பட்டு கொலையா?.. பரபரப்பு தகவல்
நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங், கடந்த 4ம் தேதி காலை திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் எழுதிய மரண வாக்குமூலம் என்ற 2 கடிதங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் 10 தனிப்படையும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. 9 நாட்களை கடந்தும் இவ்வழக்கில் மர்மம் நீடிக்கிறது.