தமிழ்நாட்டில் பக்கவிளைவுகள் இல்லை
கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் பக்கவிளைவுகள் இல்லை.
எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து தான் பின் விளைவுகள் இருக்கும்.
கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. யாரும் பதற்றத்துடன் இருக்க வேண்டாம்.
நோய் எதிர்ப்பு சக்தி தங்கள் உடலில் குறைவாகாத வண்ணம் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
காலையில் எழுந்து நடப்பது உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.