டி20 போட்டிகளில் அதிக வெற்றியை பெற்ற கேப்டன்
டி20 போட்டிகளில் அதிக வெற்றியை பெற்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றார் பாபர் அசாம்
அயர்லாந்திற்கு எதிராக பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றதையடுத்து, டி20 போட்டிகளில் அதிக வெற்றியை பெற்ற கேப்டன்கள் பட்டியலில் பாபர் அசாம் முதலிடத்திற்கு முன்னேறினார். 45 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தார் பாபர் அசாம்.
பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து அணி வரலாற்று பெற்றது. இதையடுத்து நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டி20 போட்டிகளில் அதிக வெற்றியை பெற்ற கேப்டன் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றார். இரண்டாவது இடத்தில் உள்ள ஆரோன் ஃபின்ச் (40) ஐ விட ஐந்து வெற்றிகள் முன்னிலையில் உள்ளார். மேலும் அனைத்து ஆண்கள் டி20களிலும் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற உகாண்டா கேப்டன் பிரையன் மசாபாவை (44) முந்தியுள்ளார்.
இந்த பட்டியலில் பாபர் அசாம் முதலிடத்திலும், 2019 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் மூன்றாவது இடத்திலும் (42 வெற்றிகள்), எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 41 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
முன்னாள் ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கானும் கேப்டனாக 42 வெற்றிகளுடன் மோர்கனை சமன் செய்துள்ளார். பாகிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கிடையேயான 3வது மற்றும் கடைசி போட்டி செவ்வாய்க்கிழமை டப்ளினில் நடைபெறவுள்ளது.