காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளது: வனத்துறை தகவல்
நவீன தீயணைப்பு கருவிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டது என்று வனத்துறை தெரிவித்துள்ளது. காட்டு தீ பரவுவதை தடுப்பதை கண்டறிய மாவட்ட மற்றும் மாநில அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் முறையால் காட்டுத் தீ சம்பவங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுந்த தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கொடைக்கானல், வேலூரில் அதிக அளவில் காட்டு தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளது. தடுப்பு நடவடிக்கை காரணமாக 97% காட்டுத் தீ சம்பவங்கள் 48 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.