இஞ்சி குழம்பு செய்முறை
பல அற்புதமான மருத்துவ குணம் கொண்ட இஞ்சி நம்முடைய சித்த மருத்துவத்தில் அதிக அளவு நாம் பயன்படுத்தி வருகிறோம். இதோடு மட்டுமல்ல நம்முடைய முன்னோர்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதாவது அஜீரண கோளாறு என்றதும் முதலில் இஞ்சியை தான் தேடுவார்கள். அந்த அளவிற்கு மருத்துவ குணம் மிகுந்த பொருளாக தான் இஞ்சி திகழ்கிறது. இஞ்சி இல்லாத வீடே இருக்காது என்று தான் கூற வேண்டும். அப்படிப்பட்ட இஞ்சியை பயன்படுத்தி 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த முறையில் நாம் குழம்பு செய்து தருவதன் மூலம் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். அந்த இஞ்சி குழம்பை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். இஞ்சியில் விட்டமின் ஏ, டி, இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன. இஞ்சியை நாம் முறையாக எடுத்துக் கொள்வதன் மூலம் சளி, காய்ச்சல், வைரஸ் நோய் தொற்று போன்றவை எதுவும் ஏற்படாது. மேலும் இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளில் இருந்து நம்மை காப்பாற்றவும் உதவிகிறது. மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு இஞ்சி ஒரு சிறந்த தீர்வாக திகழ்கிறது. மேலும் மூட்டுகளில் ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் வலியை குறைக்கவும் உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் வலியில் இருந்து ஒரு பெரிய நிவாரணம் தருகிறது. வயிற்றில் ஏற்படக்கூடிய எரிச்சல், அசிடிட்டி, அஜீரண கோளாறு போன்றவற்றை நீக்கவும் உதவுகிறது. கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் உடல் எடை குறைகிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. – Advertisement – தேவையான பொருட்கள் எண்ணெய் – 4 டீஸ்பூன் இஞ்சி – 2 இன்ச் தேங்காய் துருவியது – 1/4 கப் மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன் மல்லித்தூள் ஒரு- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் சீரகம் – 1/4 டீஸ்பூன் கடுகு உளுந்து – 1/4 டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 15 பூண்டு – 10 பல் தக்காளி – 1 புளி – ஒரு எலுமிச்சை அளவு உப்பு – தேவையான அளவு வெல்லம் – சிறிய துண்டு செய்முறை முதலில் இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சியை அதில் சேர்த்து நன்றாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். மீதம் இருக்கும் எண்ணெயில் துருவிய தேங்காயை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் இவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேங்காய் நன்றாக வதங்கியதும் நாம் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் இஞ்சியையும் அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கி அதை ஒரு தட்டில் மாற்றி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இஞ்சி தேங்காய் ஆறியதும் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.