அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு: ஆளுநர் விளக்கம்
அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து ஆளுநர் மாளிகைக்கு எந்த தகவலும் வரவில்லை. மேலும், வழக்குப்பதிவுக்கு அனுமதி தர ஆளுநர் மாளிகை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.