அணைக்கட்டு அருகே 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
அணைக்கட்டு அருகே பதுக்கி வைத்திருந்த 1,000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.அணைக்கட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் போலீசார் நேற்று அல்லேரி சுற்றியுள்ள மலை பகுதிகளில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் வருவதை தெரிந்து கொண்ட சாராயம் காய்ச்சும் நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.