இந்திய தேர்தலில் தலையீடா? ரஷ்யா புகாருக்கு அமெரிக்கா மறுப்பு
இந்திய தேர்தலில் அமெரிக்கா தலையிடுகிறது என்ற ரஷ்யாவின் குற்றச்சாட்டை அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். ரஷ்ய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மரியா சகாரோவா மாஸ்கோவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சீக்கிய தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கடந்த ஆண்டு அமெரிக்காவில் கொலை செய்ய நடந்த முயற்சியில் இந்தியாவின் உளவு துறைக்கு தொடர்பு இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.