பெலிக்ஸ் கைது
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் கைது
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டார். காவல் உயரதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை பற்றி அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அது மட்டுமின்றி பேட்டியளித்திருந்த தனியார் யூ டியூப் சேனல் மீதும் இந்த வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தனியார் யூ டியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் என்பவரை டெல்லியில் நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை ரயில் மூலமாக திருச்சிக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. பெண் காவலர்களை பற்றி அவதூறாக பேசிய வழக்கு கோவை, திருச்சி, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் கோவையில் பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், திருச்சியில் பதியப்பட்ட வழக்கில் எடிட்டர் பெலிக்ஸை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.