கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ்
கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
* வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவக் கூடியது
* வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80% பேருக்கு அறிகுறிகள் காணப்படுவது இல்லை
* காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்றவை வெஸ்ட் நைல் காய்ச்சலின் அறிகுறிகளாகும்
* ஒரு சிலருக்கு அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், பக்கவாதம், மூளைக் காய்ச்சல் ஏற்படும்
* மூளைக் காய்ச்சல் போன்ற பாதிப்பு இருப்பின் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்
* எலைசா மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு இருப்பதை கண்டறியலாம்
அண்மையில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது