இலுப்பூர் அருகே குளங்களில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும்
இலுப்பூர் அருகே குளங்களில் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்தி புவியியல் மற்றும் கனிம வளம் சுரங்க துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று குளங்கள் ஆழமாக வெட்டப்படுவதால் நீர் நிற்கும் போது விபத்து நேரிட வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.