அமித் ஷா திட்டவட்டம்
பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அதன் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்கு சொந்தமானது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜார்கண்டின் குந்தியில் நடந்த பாஜ பிரசார கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,‘‘மணி சங்கர் அய்யர் பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது மரியாதை கொடுங்கள் என்கிறார். சில நாட்களுக்கு முன்பு இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர் பரூக் அப்துல்லா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசாதீர்கள் பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது என்கிறார்.