10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
கமுதி, ஒட்டன்சத்திரம் மாணவிகள் 499 மதிப்பெண் பெற்று அசத்தல்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கமுதியைச் சேர்ந்த மாணவி காவியஜனனி 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் – 99, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி.பாலகிருஷ்ணா பள்ளி மாணவி சஞ்சனா அனுஷ் 499 மதிப்பெண் பெற்றார். மாணவி சஞ்சனா அனுஷ் தமிழ் பாடம் தவிர மற்ற 4 பாடங்களில் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டன்சத்திரம் அருகே கொசப்பட்டியைச் சேர்ந்த மாணவி காவியஸ்ரீ 499 மதிப்பெண் பெற்றுள்ளார்.10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தவிர மற்ற 4 பாடங்களில் மாணவி காவியஸ்ரீ 100 மதிப்பெண் எடுத்துள்ளார்.