வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 3,000 கனஅடி நீர்த்திறப்பு
தேனி: வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து 5 நாட்களுக்கு மொத்தம் 915 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது. நீர்த்திறப்பு மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 15,119 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.