வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள்
பருவ மழைக்கு முந்தைய முதுமலையில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி துவங்கியது
முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவ மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கியது.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி, யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பருவ மழைக்கு முன்பும், பருவ மழைக்கு பின்னரும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.