நகைக் கடைகளில் அமோக விற்பனை
அட்சய திருதியை நாளில் தங்க நகை வாங்க மக்கள் ஆர்வம்; நகைக் கடைகளில் அமோக விற்பனை.
அட்சய திருதியையொட்டி கோவையில் தங்கம் வாங்க நகைக் கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். அட்சய திருதியை நாளில் தங்க நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் நகைக் கடைகளில் அமோக விற்பனை நடைபெற்று வருகிறது. அட்சய திருதியையொட்டி நகைக் கடைகளில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கூட்டம் அதிகரித்துள்ளது. கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால் பகுதிகளில் நூற்றுக்கணக்கான நகைக் கடைகளில் அதிக கூட்டம் காணப்படுகிறது. கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ.30 கோடி மதிப்பிலான 60 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டன.