சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான

ராகுலை அழ வைத்த அணியின் உரிமையாளர் கோயங்கா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் படுமோசமான தோல்வியை அடைந்தது. அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் டெஸ்ட் போட்டி போல பேட்டிங் செய்து 33 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். அவரது மோசமான பேட்டிங்கால்தான் அந்த அணி வெறும் 165 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கடும் அதிருப்தியில் இருந்தார். அவர் நேராக மைதானத்திற்குள் நுழைந்து கே.எல். ராகுலை சந்தித்து கடுமையாக பேசினார். அவர் கைகளை ஆட்டி, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு பேசிய காட்சிகள் மைதானத்தில் இருந்து அனைத்து கேமராக்களிலும் பதிவானது.

பொதுவாக ஒரு அணி தோல்வி அடைந்தால் அறைக்குச் சென்ற பின்னரே உரிமையாளரோ அல்லது பயிற்சியாளரோ அது குறித்து அணியின் வீரர்கள் மற்றும் கேப்டனுடன் விவாதம் செய்வார்கள். ஆனால், இங்கு அணியின் உரிமையாளர் கோயங்கா நேரடியாக ஆடுகளத்துக்கே வந்து, கேமராக்கள் இருப்பதையும் பற்றி யோசிக்காமல், கே.எல்.ராகுல் போன்ற ஒரு அனுபவமிக்க இந்திய வீரரை கடுமையாக பேசியிருப்பது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

என்னதான்
கே.எல்.ராகுல் மோசமாக ஆடியிருந்தாலும் கூட, அது குறித்து அறையில் தான் அவர்கள் பேசியிருக்க வேண்டும் என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.