9வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்
நாகை அம்வாதம் பனங்குடியில் விவசாயிகள் 9வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப் பணிக்கான நில எடுப்பில் நிவாரணத் தொகை வழங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இன்று முக்காடு போட்டு, மடி ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.