வலிப்பு நோய் உங்களுக்கு இருந்தால் என்ன செய்வது?

1. உங்களுக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர் நண்பர்களுக்கு உங்கள் நோய் பற்றி தெரியப்படுத்துங்கள்
2. ஏதாவது ஒரு பொழுது போக்கில் ஈடுபடுங்கள் .நண்பர்களோடு உறவாடுங்கள். சமூக வாழ்க்கையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதன் மூலம் நம்பிக்கை இல்லாத உணர்வை தவிர்க்கலாம்.
3. சரியான தூக்கம், நேர நேரத்திற்கு உணவு உட்கொள்ளுதல், அதிக களைப்பு ஏற்படும் வகையான வேலைகளை த்தவிர்த்தல் ,மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளுதல், ஆகியவை வலிப்பு வரும் தடவைகளை குறைக்கும்.
4.வலிப்பு வந்துவிடுமோ? என்று எப்போதும் கவலைப்படுவதைத் தவிர்த்திடுங்கள்
5. தனியாக நீச்சல் அடிக்காதீர்கள் ஓய்வு எடுக்காமல்நீண்டதூரம் வண்டி அல்லது கனரக இயந்திரங்களை ஓட்டக்கூடாது.
6. வலிப்புவருவதற்கு தீய சக்திகள் காரணமல்ல. மாய மந்திரத்தால் குணப்படுத்த இயலாது
7. மருத்துவர் பரிந்துரை இல்லாமல் உடல் நிலை சரியாக இருக்கிறது என்று மருந்தினை நிறுத்தாதீர்கள்.
8. தாழ்வு மனப்பான்மையைத் தவிருங்கள் குழந்தைகளுக்கு வலிப்பு இருப்பின் மற்றவர்களிடம் பேச கற்றுத் தாருங்கள் வலிப்பு ஒரு சாதாரண விஷயம் என்பதை குழந்தை புரிந்து கொள்ளும்.
9. உங்கள் குழந்தையை மற்ற சாதாரண குழந்தைகளைப் போலவே நடத்துங்கள் தனியே செயல்பட விடுங்கள் ஒவ்வொரு முறையும் சரியாக நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்
10. வலிப்பு என்பது ஒரு நோய் தான். மற்றவர்களைப் போலவே தன்னாலும் வாழ முடியும் என்பதை குழந்தைக்கு எடுத்துக் கூறுங்கள்

Leave a Reply

Your email address will not be published.